skip to main
|
skip to sidebar
நான் ரசித்த ஹைகூ கவிதைகள்
Wednesday, January 25, 2012
அறை
தலை நிமிர்ந்து பார்க்க கூட
தயங்கும் நம்மூர் பெண்கள்,
காதலை சொல்லும்போது மட்டும்
கன்னத்தை வருடுவது ஏன்?
Software Engineer
எதிர்காலம் தெரியாமல்
அலைகிறான் – ஒருவேளை
எலி(Mouse) பிடித்ததனால் கைரேகை
அழிந்ததனாலோ?
Tuesday, November 22, 2011
இடைப்பட்ட தூரம்
உன் வாழ்க்கையில் அமைந்த
மிகச் சிறந்த நிகழ்வாய்
இருந்து மாறி விட்டேன்
மிகப் பெரிய தவறாய்…
இடைப்பட்ட தூரத்தில் மட்டும்
உன் காதல்
நான் கேட்காமலே அனைத்தையும்
சொல்லிக் கொண்டிருப்பாய்
இன்று எவ்வளவு கேட்டாலும்
எதுவும் சொல்வதில்லை
முடிவு தெரியாமல் காத்திருந்தால்
நம்பிக்கை எனலாம்
எல்லாம் முடிந்த பிறகும்
காத்திருந்தால்……
Wednesday, October 12, 2011
முதல் துளி…..
உணர்ச்சிகளை
உதிர்க்க முடியவில்லை
வார்த்தைகளாய் மட்டுமல்ல
கண்ணீராய்க் கூட!!!!
Wednesday, September 28, 2011
கனவும் கற்பனையும்
கண் விழித்தேன்
கனவுகள் தொலைந்தது
கற்பனைகள் பிறந்தது..
கற்பனைக்கும் கனவுக்குமான
இடைவெளி சிறிது தான்..
கனவுகள் எனக்கு கை கொடுப்பதில்லை
கற்பனைகள் என்னை கை விடுவதில்லை..
என் கனவுகளே …
என் கற்பனையாய் வருவாயோ?
என் கற்பனையே …
என் கண்ணில் தோன்றுவாயோ ?
Sunday, May 9, 2010
முத்தம்
காதல் கடனில்
வட்டியும், முதலும்
மொத்தமாய்!
முத்தம்..!
மயிலிறகு
புத்தகத்தினுள்
முனகல்
பிரசவ வேதனையில்
மயிலிறகு!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2012
(2)
▼
January
(2)
அறை
Software Engineer
►
2011
(3)
►
November
(1)
►
October
(1)
►
September
(1)
►
2010
(4)
►
May
(4)
►
2009
(27)
►
June
(27)
About Me
Srinivasan
I am trying to find about me.
View my complete profile