Monday, June 8, 2009

மாயம்

என்ன மாயம் செய்தாய்
எல்லாக் கவிதைகளும்
உன்னைப் பற்றியே...!

தாமதம்

தாமதமாக வருவதும்
கூட சுகம் தான்
காத்திருந்த கோபத்தில்
காதைத் திருகுவாள்....!

ஏசி

கணிப்பொறிக்கு இலவச
ஏசியாக இயக்கும்
என்னவள்..

மரம்

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை

குருவிக்கூடு நீங்கலாக

நீச்சல்

நீச்சல் தெரியாத சிறுவன்
நீர்க்குமிழிக்குள்...
கடைசி மூச்சு!

யாமிருக்க பயமேன்!!

ஆறு படை முருகன் கோவிலுக்கு
ஏழு பூட்டு,
- யாமிருக்க பயமேன்!!

தெரியுமா?

எனக்கு நன்றாக தெரியும்,
நீ விரும்புவது என்னை அல்ல,
என் கவிதைகளை என்று...
ஆனால் உனக்கு தெரியுமா,
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல,
நான் தான் என்று?

ஊடல்

நினைக்க வேண்டாம் என்று நினைக்க நினைக்க
ஏன் எண்ணமெல்லாம் நீயாய்...

Wednesday, June 3, 2009

சுதந்திரம்

குண்டு துளைக்காத
கூண்டிற்குள் இருந்து
சுதந்திரப் பொன்விழா..

காதல்

யாரை காதலித்தது
இந்த மேகம்,
இப்படி அழுது
கொண்டே இருக்கிறது!!!!

மெழுகுவர்த்தி

அழுது கொண்டே
இருப்பேன் நீ
அணைக்கும்வரை...

அடடே!!

பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க
முடியவில்லை
- நடத்துனரிடம் சில்லறை பாக்கி

Tuesday, June 2, 2009

சாமி

சாமி சாப்பிட ஆரம்பித்தது
படைப்பதை நிறுத்தினார்கள்
பக்தர்கள் :)

இன எதிரி

கோடரியின் கைபிடியும்
மரம்தானே..
- இன எதிரி

வேலை

அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்!!

கடன்

உலக வங்கியில் கடன் இந்தியாவிற்கு
ஊரெங்கும் கடன் குடிமகனுக்கு
அரசு எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே..

சேவிங்

சேவிங் செலவை
சேவிங் செய்பவள்
முன்னால் காதலி...

அச்சம்

புலியை விரட்டிய இனம்
கரப்பான் பூச்சிக்கு அஞ்சுகிறது
இன்றைய சில பெண்கள்;

பரிசு

விலை மதிப்பற்றது
விற்க கூடாதது
காதலி தந்த பரிசு.

பேருந்து

உன்னைப் பார்த்த நேரத்தை விட
எதிர் பார்த்த நேரமே அதிகம்
- மாநகர பேருந்து

ரோஜா

ஒரு நிமிடம் கூட என்னை விட்டு
பிரியாதே என் உயிருக்கு ஆபத்து
என்று முள்ளிடம் கெஞ்சுகிறது
- ரோஜா

ஒருவன்

ஒருவனை காதலித்தாள்
ஒருவனை மணந்தாள்,
ஒருவனின் மனைவி ஆனாள்..
ஒருவனின் பாஸ்வோர்ட் ஆனாள்!!!

மின்மினி பூச்சிகள்

வெட்கமே இல்லை
விளக்கை அணைக்காமல்.
-மின்மினி பூச்சிகள்

மரங்கள்

அழகான பூக்கள்
ஆனால் உதிர்க்கும்
இரக்கமற்ற மரங்கள்.

கொலை

என்னை கொல்பவருக்கு
தூக்கு தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
- தமிழ்

தோல்வி

காதல் தோல்வி
மலையில் இருந்து
குதித்தது
அருவி.

காதல்

காதல் - உதடுகள் உச்சரிக்கும் போது கூட ஒட்டாமல் இருப்பது,
காமம் - உதடுகள் உச்சரிக்கும் போது கூட ஒட்டி இருப்பது.